காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை.
காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர் ,
திருப்பூர் வீரபாண்டிபகுதிக்குட்பட்ட கல்லாங்காடு 2-வது விதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவரின் மகன் கவுதம் (வயது 21). இவர் டையிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. காதலியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இருவரும் பேசாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த கவுதம் நேற்று வீட்டில் தனியாக இருந்த போது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றிய தகவல் அறிந்து வீரபாண்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவுதம் உடலை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
மேலும் கவுதமின் தந்தை சசிகுமார் கொடுத்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.