தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

பட்டுக்கோட்டை அருகே நிர்வாணமாக்கி தாக்கப்பட்டதால் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த பள்ளிகொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் நாகலிங்கம். இவருடைய மகள் சினேகாவிற்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிகண்டன் மனைவி திலகராணிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே, நாகலிங்கம் மகன் நவீன்குமார் (வயது 22) என்பவர் என் சகோதரியிடம் ஏன் தகராறு செய்கிறீர்கள் என்று தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த திலகராணி மற்றும் அவரது உறவினர்கள் முருகானந்தம், சுகுமார், பாலகிருஷ்ணன், ஜோதிமணி, மனோஜ் ஆகியோர் சேர்ந்து நவீன்குமாரை நிர்வாணமாக்கி சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

பல பேர் முன்னிலையில் நிர்வாணமாக்கி தன்னை தாக்கி விட்டார்களே என்று மனமுடைந்த நவீன்குமார் வீட்டை விட்டு வெளியேறி முதல்சேரி கிராமத்தில் உள்ள ஒரு தேக்கு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அவருடைய தந்தை நாகலிங்கம் பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று நவீன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

2 பேர் கைது

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் தொடர்பாக மனோஜ் (19), பாலகிருஷ்ணன் (21) ஆகிய 2 பேரை கைது செய்தனர். முருகானந்தம், சுகுமார், ஜோதிமணி மற்றும் சிலரை தேடி வருகிறார்.


Next Story