மேல்விஷாரம் கல்லூரியில் இளைஞர் விழா


மேல்விஷாரம் கல்லூரியில் இளைஞர் விழா
x

மேல்விஷாரம் கல்லூரியில் இளைஞர் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் காந்தி பங்கேற்றார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சி குளோபல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நேரு யுகேந்திரா வேலூர் இணைந்து நடத்திய இளைஞர் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு பேசினார்.

இதில் மாவட்ட கலெக்டர் வளர்மதி, ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மேல்விஷாரம் நகர மன்ற தலைவர் எஸ்.டி.முகமது அமீன், மாவட்ட இளைஞர் நல அலுவலர் (நேரு யுகேந்திரா) பிரேம் பரத்குமார், கண்காணிப்பாளர் காயத்ரி, கல்லூரி தாளாளர் ஹேமாவதி பிரசாத், கல்லூரி முதல்வர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story