தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது


தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
x

திருவிடைமருதூர் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.4 லட்சம் நகைகள் மீட்டனர்.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்:

திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பூட்டிய வீடுகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத் உத்தரவின் பேரில் திருவிடைமருதூர் துணை ேபாலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில் போலீஸ் ஏட்டுகள் ரமணி, கார்த்திக், போலீசார் விக்னேஷ், முனியப்பன், முகமது ரியாஸ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தேப்பெருமாநல்லூர் கரிக்குளம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது29) என்பவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் தொடர் திருட்டில் ஈடுபட்டது இவர் தான் என்பது தெரிய வந்தது. இதுகுறித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்ராஜை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் ரூ.4 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை திருவிடைமருதூர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story
  • chat