தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது; கார் பறிமுதல்


தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது; கார் பறிமுதல்
x
தினத்தந்தி 10 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-11T00:16:35+05:30)

ஆலங்குளத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி

ஆலங்குளம், பிப்.11-

ஆலங்குளம் காமராஜர் நகரில் கடந்த நவம்பர் மாதம் 13-ந் தேதி வட்டார வளர்ச்சி அலுவலர் வீடு உள்பட 5 வீடுகளிலும், டிசம்பர் மாதம் 25-ந் தேதி ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் வீரபுத்திரன் என்பவரது வீடு உள்பட ஏழு வீடுகளிலும் ரூ.30 லட்சத்திற்கும் அதிகமான பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து ஆலங்குளம் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கண்காணிப்பு கேமரா மற்றும் செல்போன் நெட்வொர்க் அடிப்படையில் கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த சம்பத்குமார் மகன் சஞ்சீவ் குமார் (வயது 26) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சஞ்சீவ் குமார் மீது கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கஞ்சா, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருந்தது தெரிய வந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சஞ்சீவி குமாரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சஞ்சீவ் குமார் தான் ஆலங்குளத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர் திருட்டில் ஈடுபட்ட மற்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கைதான சஞ்சீவ்குமாரை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.Next Story