கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் குண்டர் சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு


கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் குண்டர் சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு
x

காஞ்சீபுரம் புறவழிச்சாலையில் கல்லூரி மாணவியை கூட்டு பலாத்கார செய்த வழக்கில் வாலிபரை குண்டர் சட்டத்தில் போலீசார் சிறையில் அடைத்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் புறவழிச்சாலையில் கடந்த ஜனவரி மாதம் தனியார் பள்ளி அருகே காதலனுடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை கத்தி முனையில் 5 பேர் கூட்டு பலாத்காரம் செய்தனர். இந்த வழக்கு மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட விப்பேடு கிராமத்தை சேர்ந்த தென்னரசு என்ற மரம் (22) போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர்சுதாகர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்திக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் தென்னரசுவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

1 More update

Next Story