மின்சாரம் தாக்கி வாலிபர் பலி


மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே மின்சாரம் தாக்கியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

கடலூர்

பண்ருட்டி,

பண்ருட்டி அருகே உள்ள பலாப்பட்டு கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன் மகன் கலைமகன்(வயது 27). இவர் புதுச்சேரி முள்ளோடையில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மேல்மாம்பட்டு தெற்கு தெருவை சேர்ந்த செந்தாமரைகண்ணன் மகன் தினேஷ் என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டின் மாடியில் உள்ள ஜன்னல்களுக்கு கண்ணாடி பொருத்துவதற்காக அளவீடு செய்யும் பணியில் கலைமகன் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் சென்ற மின்கம்பியில் அவரது உடல் பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த கலைமகனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story