செல்போன் கோபுரம் மீது ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல் - மதுரையில் பரபரப்பு


செல்போன் கோபுரம் மீது ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல் - மதுரையில் பரபரப்பு
x

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நகராட்சி தலைவர் உள்ளிட்டோர் சமாதானப்படுத்தியதை அடுத்து, அவர் கீழே இறங்கி வந்தார்.

மதுரை,

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருமங்கலம் முகமதுஷாபுரத்தைச் சேர்ந்த மதன பிரகாஷை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தாக்கியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இரண்டு மாதங்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, செல்போன் கோபுரத்தின் மீது ஏறி மதன பிரகாஷ் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நகராட்சி தலைவர் உள்ளிட்டோர் சமாதானப்படுத்தியதை அடுத்து, அவர் கீழே இறங்கி வந்தார்.Next Story