கிராவல் மண் கடத்திய வாலிபர் கைது


கிராவல் மண் கடத்திய வாலிபர் கைது
x

கிராவல் மண் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகையன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை தொண்டைமான் நல்லூர் சுங்கச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். சோதனையில், லாரியில் அப்பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரி டிரைவர் களமாவூரை சேர்ந்த சங்கிலிமுத்து மகன் விக்னேஷ் (வயது 23) என்பவரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸை கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.


Next Story