யுகாதி பண்டிகை: அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வாழ்த்து
யுகாதி பண்டிகையை முன்னிட்டு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
யுகாதி பண்டிகையை முன்னிட்டு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
யுகாதி திருநாளை புத்தாண்டாக உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் தங்களுடைய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பேணிக்காப்பதோடு, பல நூற்றாண்டாக தமிழ்நாட்டு மக்களோடு ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
கன்னட மற்றும் தெலுங்கு மக்கள் பேசும் மொழிகள் வெவ்வேறாக இருந்தாலும் தமிழக மக்களின் இன்ப, துன்பங்களில் பங்கேற்பதோடு, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டில் ஒருமித்த ஒற்றுமை உணர்வோடு வாழ்ந்து வேற்றுமையில் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர்.
யுகாதி திருநாளில் மலரும் புத்தாண்டு தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுடனான தமிழக மக்களின் ஒற்றுமையும், நட்புணர்வும் தொடரும் ஆண்டாக அமைய வேண்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை யுகாதி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.