மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி-4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி


மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி-4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி
x

பெரம்பலூரில் மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில், 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

பெரம்பலூர்

தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் சார்பில் திருச்சி மண்டல அளவிலான 16 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டிகள் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள கோல்டன்கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பெரம்பலூர், அரியலூர் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் இருந்து தலா ஒரு மாணவர் அணியும், மாணவி அணியும் கலந்து கொண்டு விளையாடி வந்தனர். மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் போட்டிகள் நடந்து வருகிறது. லீக் போட்டிகள் நேற்றுடன் நடந்து முடிந்தது.

கால் இறுதி போட்டிகளில் மாணவர்கள் பிரிவில் வெற்றி பெற்ற திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், திருவாரூர் ஆகிய மாவட்ட அணிகளும், மாணவிகள் பிரிவில் வெற்றி பெற்ற அரியலூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்ட அணிகளும் அரை இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளன. அரையிறுதி போட்டிகள் காலையில் நடக்கிறது. அதில் வெற்றி பெறும் அணிகள் மாலையில் இறுதி போட்டியில் விளையாடவுள்ளன. அதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. மண்டல அளவில் முதலிடம் பிடிக்கும் அணிகள் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story