தே.மு.தி.க. வேட்பாளர் நேர்காணல் 6-ந் தேதி தொடங்குகிறது 3 நாட்கள் நடைபெறுகிறது
தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் வருகிற 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் முன்னிலையில் நேர்காணல் நடைபெறுகிறது.
சென்னை,
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் வருகிற 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் முன்னிலையில் நேர்காணல் நடைபெறுகிறது. அதன் விவரம் வருமாறு (மாவட்ட வாரியாக):-
6-ந் தேதி காலை 10.35 மணிக்கு கோவை, நீலகிரி, ஈரோடு, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தேனி. மதியம் 2 மணிக்கு கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர்.
7-ந் தேதி காலை 9 மணிக்கு தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திருப்பூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி. மதியம் 2 மணிக்கு தஞ்சை, சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு.
8-ந் தேதி காலை 9 மணிக்கு மதுரை, திண்டுக்கல், தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம். மதியம் 2 மணிக்கு திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story