தொகுதி பங்கீடு குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை தொடங்கியது


தொகுதி பங்கீடு குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை தொடங்கியது
x
தினத்தந்தி 4 March 2021 5:24 AM GMT (Updated: 4 March 2021 5:24 AM GMT)

தொகுதி பங்கீடு குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை தொடங்கியது.

சென்னை,

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில் சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் தி.மு.க. இன்று  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில்தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த பேச்சு வார்த்தையில் கொ.ம.தே.க சார்பில் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், துணை பொதுச்செயலாளர்கள் சக்திகோச் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தலைமை நிலையச்செயலாளர் சுரேஷ் பொன்னுவேல், சூரிய மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Next Story