யார் வசமாகப் போகிறது ‘தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு’
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற நகரங்களில் ஒன்று பாளையங்கோட்டை. இங்கு அரசு மருத்துவக்கல்லூரி, அரசு சித்தா கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் நிறைந்திருப்பதால், ‘தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு’ என்று அழைக்கப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்
நெல்லை மாநகரில் பாயும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி வழியாகவும் செல்கிறது. பெரிய தொழிற்சாலைகள் இல்ைல என்ற போதிலும் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், மத்திய சிறைச்சாலை, போலீஸ் கமிஷனர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள், வருமான வரி, சுங்க இலாகா, வருங்கால வைப்பு நிதி, இ.எஸ்.ஐ. தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு கழகம் உள்பட மத்திய, மாநில அரசு அலுவலகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.மேலும் சந்திப்பு ரெயில் நிலையம், சந்திப்பு பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், பாளையங்கோட்டை பஸ் நிலையம் ஆகியவையும் இந்த தொகுதிக்குள் அமைந்திருப்பது சிறப்பு அம்சமாகும்.
மக்கள்தொைக நெருக்கம்
தொகுதி சீரமைப்புக்கு பிறகு பாளையங்கோட்டை ஊரக பகுதிகள் இந்த தொகுதியில் இருந்து நீக்கப்பட்டு, தாமிரபரணி ஆற்றங்கரையில் இருக்கும் ஒருசில மாநகராட்சி வார்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டன. மக்கள்தொகை நெருக்கம் இருந்தபோதிலும், இந்த தொகுதி பரப்பளவில் குறைந்த பகுதியாகவே இருக்கிறது.கலெக்டர் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள், குடும்பத்தினர் பெரும்பாலானோர் இந்த தொகுதியில்தான் வசித்து வருகிறார்கள். மேலப்பாளையத்தில் முஸ்லிம்களும், பாளையங்கோட்டையில் கிறிஸ்தவர்களும் அதிகமாக வசித்து வருகின்றனர். இந்த தொகுதியில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 193 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 38 ஆயிரத்து 511 பெண் வாக்காளர்கள், 21 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 71 ஆயிரத்து 725 வாக்காளர்கள் உள்ளனர்.
தொடர்ந்து 4 முறை வெற்றி
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி இதுவரை 12 முறை தேர்தலை சந்தித்து உள்ளது. இதில் அ.தி.மு.க. 3 முறையும் (1977-ம் ஆண்டு, 1980, 1991), தி.மு.க. 5 முறையும் (1989, 2001, 2006, 2011, 2016), முஸ்லிம் லீக் 2 முறையும் (1967, 1984), தேசிய லீக் ஒரு முறையும் (1996), 1971-ம் ஆண்டு சுயேச்சையும் வெற்றி பெற்று உள்ளன. கடந்த 4 தேர்தல்களில் தி.மு.க. தொடர்ந்து வெற்றி பெற்று உள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட டி.பி.எம்.மைதீன்கான் 67,463 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். 2-வது இடம் பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் ஹைதர் அலிக்கு 51,591 ஓட்டுகள் கிடைத்தன.
ேகாரிக்கைகள்
பாளையங்கோட்டை, மேலப்பாளையத்தையொட்டி புறநகர் பகுதிகள் விரிவாக்கம் அடைந்து வருகின்றன. அந்த பகுதிகளுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்பது கோரிக்கையாக இருந்தது. அதற்காக அரியநாயகிபுரம் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு பணிகள் நிறைவு பகுதியை எட்டி உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 3 பஸ் நிலையங்களையும் இடித்து, புதுப்பித்து கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சந்திப்பு ரெயில் நிலையத்தை சுற்றி இடநெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும், போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க புதிய இணைப்பு சாலைகளை உருவாக்க வேண்டும், குலவணிகர்புரத்தில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும், தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரும் அரசியல் கட்சி வேட்பாளரின் வசமாகும் ‘தென்னக்கத்தின் ஆக்ஸ்போர்டு’ என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயோடேட்டா
மொத்த வாக்காளர்கள் - 2,71,725
ஆண்கள் - 1,33,193
பெண்கள் - 1,38,511
மூன்றாம் பாலினத்தவர்கள் - 21
Related Tags :
Next Story