புதுச்சேரியில் என்.ஆர்.காங். - மக்கள் நீதி மய்யம் இடையே பேச்சுவார்த்தை


புதுச்சேரியில் என்.ஆர்.காங். - மக்கள் நீதி மய்யம் இடையே பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 5 March 2021 6:33 PM IST (Updated: 5 March 2021 6:35 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் என்.ஆர்.காங். - மக்கள் நீதி மய்யம் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி,

புதுவை சட்டமன்றத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. காங்கிரஸ் அணியில் தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாக நிற்கிறது.

தொகுதி ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் என்.ஆர்.காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் இதற்காக குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் -மக்கள் நீதி மய்யம் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. என்.ஆர்.காங். தலைவர் ரங்கசாமியுடன் மக்கள் நீதி மய்யம் மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் கூட்டணி குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளன.  பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் மநீம நிர்வாகிகள் சந்திப்பு முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Next Story