எந்தெந்த தொகுதிகளில் பாமக போட்டி? தனியார் ஹோட்டலில் அதிமுகவுடன், பாமக ஆலோசனை


எந்தெந்த தொகுதிகளில் பாமக போட்டி? தனியார் ஹோட்டலில் அதிமுகவுடன், பாமக ஆலோசனை
x
தினத்தந்தி 5 March 2021 4:27 PM GMT (Updated: 5 March 2021 4:27 PM GMT)

எந்தெந்த தொகுதிகளில் பாமக போட்டி? என்பது குறித்து தனியார் ஹோட்டலில் அதிமுகவுடன், பாமக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

சென்னை,

அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணிகளில் இடம்பெற்று சட்டசபை தேர்தலை சந்திக்க விரும்பும் எல்லா கட்சிகளும் தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கும்படி கேட்பதால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது.சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடக்கவுள்ள நிலையில் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.

தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அ.தி.மு.க மற்றும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிகளில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அ.தி.மு.க.- பா.ம.க. இடையே சுமுகமான முறையில் தொகுதி உடன்பாடு செய்யப்பட்டு விட்டது. பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் எந்தெந்த தொகுதிகளில் பாமக போட்டியிடப்போகிறது என்பது குறித்து  சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் அதிமுகவுடன், பாமக ஆலோசனை நடத்தி வருகிறது. பாமக சார்பாக ஜி.கே மணி, ஏகே.மூர்த்தி, பாலு உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Next Story