மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவை கண்டு தூது விட்டவர்கள் பலர், தூக்கத்தை தொலைத்தவர்கள் பலர் - கமல்ஹாசன் பேச்சு


மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவை கண்டு தூது விட்டவர்கள் பலர், தூக்கத்தை தொலைத்தவர்கள் பலர் - கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 5 March 2021 5:29 PM GMT (Updated: 5 March 2021 5:29 PM GMT)

மக்கள் நீதி மய்யத்திற்கு மக்களிடம் பெருகும் ஆதரவை கண்டு தூது விட்டவர்கள் பலர், தூக்கத்தை தொலைத்தவர்கள் பலர் என்று கமல்ஹாசன் கூறினார்.

சென்னை,

சட்டப்பேரவை தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார். திறந்த வேனில் நின்றபடி வெற்றிச்சின்னத்தை காட்டி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திருவல்லிகேணி தொகுதி மக்களிடம் கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார்.

திருவல்லிக்கேணியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:-

காங்கிரஸின் இருப்பை இல்லாமல் செய்து கொண்டிருப்பவர்கள் தான் பி டீம். நான் கூறுகிறேன் நான் விற்பனைக்கு அல்ல, மக்கள் நீதி மய்யமும் விற்பனைக்கு அல்ல. மக்கள் மத்தியில் பெருகிவரும் ஆதரவை கண்டு தூது விட்டவர்கள் பலர், தூக்கத்தை தொலைத்தவர்கள் பலர்.

காமராஜர் என்னுடைய பெரியப்பா. நான் படிக்கவில்லை என்பதால் என்னை கூத்தாடி என திட்டுவார். ஆனால் நான் பெரிய கூத்தாடியாக வந்து பின்னாலில் அவர் செய்த வேலையை நான் செய்வேன் என்று அவருக்கு அன்று தெரியாது. முதல் ஆட்சிகாலத்தில் 50 லட்ச வேலைவாய்ப்பு வழங்குவோம், வேலையின்மையை குறைப்போம். இங்கு திமுகவா? அதிமுகவா? ஆட்சியா என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. மக்கள் ஆட்சியாக இருக்க வேண்டும். அதற்காகதான் நாங்கள் வந்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.  

Next Story