தாமரையும் எங்களது தான், இரட்டை இலையும் எங்களது தான் - பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி


தாமரையும் எங்களது தான், இரட்டை இலையும் எங்களது தான் - பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி
x
தினத்தந்தி 7 March 2021 6:47 AM GMT (Updated: 2021-03-07T12:17:29+05:30)

தாமரையும் எங்களது தான், இரட்டை இலையும் எங்களது தான் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

மதுரை,

இதுகுறித்து மதுரையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியதாவது:-

தேசிய கட்சியான தாமரையும் எங்களது தான், கூட்டணியில் இருக்கும் இரட்டை இலையும் எங்களது தான், மாம்பழமும் எங்களது தான். மேலும் எங்கள் தேசிய கட்சி கூட்டணியில் இருக்கும் அனைத்து சின்னமும் எங்களது தான் என கூறினார்.

பாஜக தேசிய கட்சி என்பதால் ஆங்கிலம் மற்றும் இந்திக்கு தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. தேசிய அளவில் இந்தி, ஆங்கிலம் தான் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் நாம் தமிழ் பயன்படுத்துகிறோம். ஆகையால், வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய கட்சியில் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகள் பாகுபாடு இன்றி இணைந்து பணியாற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story