திமுக - மார்க்சிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நாளை கையெழுத்தாக வாய்ப்பு
திமுக - மார்க்சிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நாளை கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தையடுத்து, ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் உச்சபட்ச பரபரப்பில் உள்ளது.
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றிற்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே நடைபெற்ற 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. திமுக ஒதுக்குவதாக கூறும் தொகுதிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும், மார்க்சிஸ்ட் செயற்குழு கூட்டத்திற்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், திமுக - மார்க்சிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நாளை கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 7 தொகுதிகளை கேட்டுப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டிருப்பதாகவும் மார்க்சிஸ்ட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
Related Tags :
Next Story