அ.தி.மு.க.வுக்கு தோழமைக்கட்சிகள் ஆதரவு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன் நிர்வாகிகள் சந்திப்பு
சென்னையில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வத்தை தோழமை கட்சிகள் நிர்வாகி கள் சந்தித்து, தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்தனர்.
சென்னை,
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தோழமை கட்சி தலைவர்கள் நேற்று சந்தித்து பேசினர்.
அந்த வகையில், புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனத்தலைவர் டாக்டர் ந.சேதுராமன், பசும்பொன் தேசிய கழக தலைவர் என்.ஜோதி முத்துராமலிங்க தேவர், பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனத்தலைவர் முருகன், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் வேட்டவலம் மணிகண்டன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் எஸ்.ஷேக் தாவூத், இந்திய தேசிய குடியரசு கட்சி நிறுவனத்தலைவர் சி.அம்பேத் பிரியன், வீர முத்திரையர் முன்னேற்ற சங்க நிறுவனத்தலைவர் கே.கே.செல்வகுமார், தமிழ் தெலுங்கு தேசிய கட்சி நிறுவனர் ஈ.வி.எஸ்.ராஜகுமார் நாயுடு உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
வாழ்த்து
அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை, கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.டி.குமார், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.ஜி.ரத்தினம் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து கூறினர்.
Related Tags :
Next Story