தமிழகத்தில் பாஜக காலூன்ற அனுமதித்து விடக்கூடாது : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்


தமிழகத்தில் பாஜக காலூன்ற அனுமதித்து விடக்கூடாது : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
x
தினத்தந்தி 8 March 2021 8:50 AM GMT (Updated: 8 March 2021 8:50 AM GMT)

தெரிந்தோ தெரியாமாலோ தமிழகத்தில் பாஜக காலூன்ற அனுமதித்து விடக்கூடாது என்பதில் உறுதியுடன் இருக்கிறோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.

சென்னை,

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘’ தமிழகத்தில் மாற்று ஆட்சி அமைய வேண்டும். அதிமுக – பாஜக கூட்டணியை முறியடிக்க வேண்டும் என்பதே எங்களது பிரதானமான நோக்கம். தெரிந்தோ தெரியாமாலோ தமிழகத்தில் பாஜக காலூன்ற அனுமதித்து விடக்கூடாது என்பதில் உறுதியுடன் இருக்கிறோம். 

பாஜகவையும், அதிமுகவையும் முறியடிப்பது எந்த அளவுக்கு அவசியமோ, அதே அளவுக்கு அதிக எண்ணிக்கையில் நாங்கள் சட்டப்பேரவையில் இடம்பெற வேண்டும் என்பதும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல் அவசியம் என்கிற அடிப்படையில் தொடர்ந்து முயன்றோம்.

 இறுதியாக இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 6 தொகுதிகள் என்பது உறுதியானது. மிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றுவிடக்கூடாது, திமுக கூட்டணி வெற்றிபெற்று மாற்று ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக 6 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவெடுத்து அந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளோம்” என்றார்.

Next Story