சட்டமன்ற தேர்தல் - பாமக இன்று அவசர ஆலோசனை
சட்டமன்ற தேர்தலையொட்டி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தையடுத்து, அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகிறது. அதிமுக கூட்டணியில் முதலில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான போட்டியிட விரும்பும் தொகுதிகளின் உத்தேச பட்டியலையும் பாமக அதிமுகவுடன் கொடுத்திருந்தது.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தலையொட்டி பாமக இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுகவுடன் எந்தெந்த தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், காணொலி மூலம் அவசர ஆலோசனை நடைபெறும் என பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story