திமுகவுக்கு அளித்த ஆதரவு வாபஸ்- கருணாஸ் திடீர் பல்டி


திமுகவுக்கு அளித்த ஆதரவு வாபஸ்-  கருணாஸ் திடீர் பல்டி
x
தினத்தந்தி 9 March 2021 10:14 AM GMT (Updated: 2021-03-09T15:44:15+05:30)

திமுகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார்.

சென்னை

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை இடம்பெற்றிருந்தது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட கருணாஸ் திருவாடானைதொகுதி எம்.எல்.ஏ ஆனார். 5 வருடங்கள் எம்.எல்.ஏ ஆக இருந்த கருணாஸ் சமீபத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.

அத்துடன் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாகவும், தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், திமுகவுக்கு ஆதரவு மற்றும் தொகுதிகள் கேட்டு தந்த கடிதத்தை திரும்பப் பெறுவதாக கருணாஸ் தெரிவித்துள்ளார். 


Next Story