போட்டியிடும் தொகுதிகளை பெறுவதில் இந்திய கம்யூனிஸ்ட் அதிருப்தி என தகவல்
போட்டியிடும் தொகுதிகளை பெறுவதில் இந்திய கம்யூனிஸ்ட் அதிருப்தி என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் என உடன்பாடு ஏற்பட்டது.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிரதான கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் 2 கட்டமாக பேச்சுவார்த்தை நடந்தது. ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கியது போன்று 6 தொகுதிகளை ஒதுக்க தி.மு.க. முன்வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அதை ஏற்கவில்லை. கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது.
இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அதற்கான ஒப்பந்தத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில் திமுக - இ. கம்யூ. இடையே போட்டியிடும் தொகுதிகள் பெறுவது குறித்து 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இதில் 9 விருப்ப தொகுதிகளின் பட்டியலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுகவிடம் கொடுத்தது. அதில் 9-இல் 1 தொகுதியை மட்டுமே வழங்குவதாக திமுக சொல்கிறது என தகவல் வெளியாகியுள்ளன.
மேலும் தி.மு.க. கறாரால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நிறைவுக்கு பின் அறிவாலயத்தில் இருந்து இந்தியக் கம்யூனிஸ்ட் குழு புறப்பட்டது .
Related Tags :
Next Story