சட்டசபை தேர்தல் அதிமுக வேட்பாளர் பட்டியல் முக்கிய அம்சங்கள்; 3 அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பில்லை


சட்டசபை தேர்தல் அதிமுக வேட்பாளர் பட்டியல் முக்கிய அம்சங்கள்; 3 அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பில்லை
x
தினத்தந்தி 10 March 2021 7:03 PM IST (Updated: 10 March 2021 7:38 PM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட 171 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

சென்னை

அ.தி.மு.க. சார்பில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2-ம் கட்டமாக வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில்  அதிமுக சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட 171 வேட்பாளர்கள் வெளியிடப்பட்டது.

அதிமுக வேட்பாளர் பட்டியல்லின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-  

* கடந்த முறை வெற்றி பெற்று அமைச்சர்களாக பதவி வகித்து வரும் பாஸ்கரன், நிலோபர் கபில் மற்றும் வளர்மதி ஆகிய 3 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, கதர் காதி கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபீல் ஆகிய மூவருக்கு  வாய்ப்பி வழங்கப்படவில்லை.

* சிவகாசி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ராஜபாளையம் தொகுதிக்கு மாறி உள்ளார்.

* திருத்தணி எம்எல்ஏவாக உள்ள நரசிம்மன், ஊத்தங்கரை எம்எல்ஏவாக உள்ள மனோரஞ்சிதம் , பர்கூர் எம்எல்ஏவாக உள்ள ராஜேந்திரன்,
கள்ளக்குறிச்சி எம்எல்ஏவாக இருக்கும் பிரபு ,கெங்கவல்லி எம்எல்ஏவாக உள்ள மருதமுத்து, ஆத்தூர் தொகுதி எம்எல்ஏ சின்னதம்பிக்

ஓமலூர் தொகுதி எம்எல்ஏ வெற்றிவேல், சங்ககிரி தொகுதி எம்எல்ஏ எஸ்.ராஜா, சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் ஆகியோருக்கு  வாய்ப்பு வழங்கப்படவில்லை மேட்டூர் தொகுதி பாமகவிற்கு ஒதுக்கப்பட்டதால் செம்மலை தேர்தலில் போட்டி இல்லை.

* அதிமுக மாநிலங்களவை எம்பிக்களாக உள்ள 2 பேருக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு  வழங்கப்பட்டு உள்ளது.

 கோவையில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. அதில் தற்போது எம்எல்ஏக்களாக உள்ள 5 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

* கோவையில் கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ வி.சி.ஆறுகுட்டி, கிணத்துக்கடவு எம்எல்ஏ எட்டிமடை சண்முகம், வால்பாறை எம்எல்ஏ கஸ்தூரி வாசு, மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

* அதிமுக கூட்டணியில் இன்னும் 14 தொகுதிகளுக்கான விவரங்கள் வெளியாகவில்லை

*177 அதிமுக வேட்பாளர் பட்டியலில் 15 பெண் வேட்பாளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா அண்ணாநகர் தொகுதியிலும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா.வளர்மதி ஆலந்தூரிலும், முன்னாள் எம்எல்ஏ கணிதாசம்பத் செய்யூர் தனித் தொகுதியிலும், முன்னாள் எம்எல்ஏ மரகதம் குமரவேல் மதுராந்தகம் தொகுதியிலும், பேர்ணாம்பட்டு மேற்கு ஒன்றியக் கழக இணைச் செயலாளர் பரிதா குடியாத்தம் தனித் தொகுதியிலும், ஓசூர் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் வார்டு உறுப்பினர் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி ஓசூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

எம்எல்ஏ சித்ரா ஏற்காடு தொகுதியிலும், அமைச்சர் சரோஜா ராசிபுரம் தனித்தொகுதியிலும், எம்எல்ஏ பொன்.சரஸ்வதி திருச்செங்கோடு தொகுதியிலும், முன்னாள் எம்எல்ஏ இந்திராகாந்தி துறையூர் தனித் தொகுதியிலும், தீத்தான்விடுதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயபாரதி கந்தர்வகோட்டை தனித் தொகுதியிலும், விருதுநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் லட்சுமி கணேசன் சிவகாசி தொகுதியிலும், அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி முதுகுளத்தூர் தொகுதியிலும், அமைச்சர் ராஜலெட்சுமி சங்கரன்கோவில் தனித் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.


Next Story