திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியீடு


திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 10 March 2021 2:40 PM GMT (Updated: 10 March 2021 2:40 PM GMT)

திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது

சென்னை

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித் தமிழர் பேரவை ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சாத்தூர், கோவை வடக்கு, மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர், மதுராந்தகம், அரியலூர் ஆகிய தொகுதிகளில் மதிமுக போட்டியிடுகிறது.


Next Story