அதிமுக கூட்டணியில் ஜான்பாண்டியன் கட்சிக்கு எழும்பூர்; என்.ஆர். தனபாலன் கட்சிக்கு பெரம்பூர் தொகுதி ஒதுக்கீடு


அதிமுக கூட்டணியில் ஜான்பாண்டியன் கட்சிக்கு எழும்பூர்; என்.ஆர். தனபாலன் கட்சிக்கு பெரம்பூர் தொகுதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 10 March 2021 3:44 PM GMT (Updated: 10 March 2021 3:44 PM GMT)

அதிமுக கூட்டணியில் ஜான்பாண்டியன் கட்சிக்கு எழும்பூர் தொகுதியும், என்.ஆர். தனபாலன் கட்சிக்கு பெரம்பூர் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்ப்ட்டு உள்ளது.

சென்னை

அதிமுக மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி இடையே கூட்டணி பேச்சுவார்த்தை சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. அதிமுக சார்பில் வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கமும், பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் என்.ஆர். தனபாலனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அது போல் ஜான்பாண்டியனின் தமிழக முன்னேற்ற கழகமும்  பேஎச்சுவார்த்தை நடத்தியது 

அதிமுக கூட்டணியில்  ஜான்பாண்டியனின் தமிழக முன்னேற்ற கழகம்  சென்னை எழும்பூர் (தனி)  தொகுதியில் போட்டியிடுகிறது. 

அதுபோல் சென்னையில் பெரம்பூர் தொகுதி பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய தனபாலன், “அதிமுக கூட்டணியில் மூன்று தொகுதிகளை வழங்கவும், தென்மாவட்டத்தில் ஒரு தொகுதி ஒதுக்கவும் கோரியுள்ளதாக கூறினார். சென்னையில் பெரம்பூர் தொகுதியை தருவதாக அதிமுக பேச்சுவார்த்தை குழுவினர் தெரிவித்துள்ளதாக கூறினார்.

மேலும், அதிமுக கொடுக்கும் தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் தனபாலன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற தொகுதிகள் குறித்து கட்சி தலைமையிடம் ஆலோசித்து, இன்று மாலை தெரிவிப்பதாக அதிமுக நிர்வாகிகள் கூறியுள்ளதாகவும் என்.ஆர்.தனபாலன் தெரிவித்தார்.


Next Story