சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க.வின் 15 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் டி.டி.வி.தினகரன் வெளியிட்டார்


சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க.வின் 15 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் டி.டி.வி.தினகரன் வெளியிட்டார்
x
தினத்தந்தி 10 March 2021 11:20 PM GMT (Updated: 10 March 2021 11:20 PM GMT)

அ.ம.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிடும் 15 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ளார்.

சென்னை, 

டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. கூட்டணியில் நேற்று முன்தினம் வரையிலான நிலவரப்படி ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகளும், கோகுல மக்கள் கட்சி, மருது சேனை சங்கம் ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அ.ம.மு.க. சார்பில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நிறைவு பெற்ற நிலையில், 15 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பி.பழனியப்பன்-ஜி.செந்தமிழன்

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக சட்டசபை தேர்தலில் அ.ம.மு.க.வின் முதல் கட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

ராசிபுரம் (தனி) -முன்னாள் எம்.பி. எஸ்.அன்பழகன் (அ.ம.மு.க. துணை தலைவர்), பாப்பிரெட்டிப்பட்டி-முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் (அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர்), பாபநாசம்-முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ரெங்கசாமி (அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர்), சைதாப்பேட்டை- முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன் (அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர்), ஸ்ரீரங்கம்-முன்னாள் அரசு கொறடா ஆர்.மனோகரன் (அ.ம.மு.க. பொருளாளர்), மடத்துக்குளம்- முன்னாள் அமைச்சர் சி.சண்முகவேலு (அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளர்), திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) - முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே.உமாதேவன் (அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளர்),

சோளிங்கர்-முன்னாள் எம்.எல்.ஏ. என்.ஜி.பார்த்திபன் (அ.ம.மு.க. தேர்தல் பிரிவு செயலாளர்), வீரபாண்டி-முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி எஸ்.கே.செல்வம் (அ.ம.மு.க. அமைப்பு செயலாளர்), உசிலம்பட்டி- முன்னாள் எம்.எல்.ஏ. இ.மகேந்திரன் (அ.ம.மு.க. அமைப்பு செயலாளர்), கோவை தெற்கு-முன்னாள் எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரை என்ற ஆர்.துரைசாமி (அ.ம.மு.க. அமைப்பு செயலாளர்), அரூர்-முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.ஆர்.முருகன் (அ.ம.மு.க. அமைப்பு செயலாளர்), பொள்ளாச்சி-முன்னாள் எம்.பி. கே.சுகுமார் (அ.ம.மு.க. ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்), தர்மபுரி-டி.கே.ராஜேந்திரன் (அ.ம.மு.க. அமைப்பு செயலாளர்), புவனகிரி-கே.எஸ்.கே.பாலமுருகன் (அ.ம.மு.க. அமைப்பு செயலாளர்) ஆகியோர் நிறுத்தப்பட உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 8 பேருக்கு வாய்ப்பு

முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள் 3 பேருக்கும், முன்னாள் எம்.பி.க்கள் 2 பேருக்கும், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 8 பேருக்கும் டி.டி.வி.தினகரன் வாய்ப்பு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story