தெற்கு தொகுதியை பா.ஜனதாவுக்கு ஒதுக்க எதிர்ப்பு: கோவையில் அ.தி.மு.க.வினர் திடீர் போராட்டம்


தெற்கு தொகுதியை பா.ஜனதாவுக்கு ஒதுக்க எதிர்ப்பு: கோவையில் அ.தி.மு.க.வினர் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 11 March 2021 4:54 AM IST (Updated: 11 March 2021 4:54 AM IST)
t-max-icont-min-icon

தெற்கு தொகுதியை பா.ஜனதாவுக்கு ஒதுக்க எதிர்ப்பு: கோவையில் அ.தி.மு.க.வினர் திடீர் போராட்டம்.

கோவை, 

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில், தற்போது அ.தி.மு.க. வசம் உள்ள கோவை தெற்கு சட்டசபை தொகுதி பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த தொகுதியில், அந்த கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் களம் இறக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் கோவை தெற்கு தொகுதியை அந்த தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வான அம்மன் கே.அர்ச்சுனனுக்கே மீண்டும் ஒதுக்க வேண்டும் என நேற்று காலை அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் தெற்கு தொகுதிக்குட்பட்ட 25வது வார்டு செயலாளர்கள், 5 டிவிஷன் செயலாளர்கள் என ஏராளமானோர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கட்சி அலுவலகமான இதய தெய்வம் மாளிகை முன்பு திரண்டு திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கோவை தெற்கு தொகுதியை மீண்டும் அம்மன் அர்ச்சுனனுக்கு நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்வோம் என்று தெரிவித்ததால் பரபரப்பு உண்டானது.

இந்த நிலையில், நேற்று வெளியான அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலில் அம்மன் கே.அர்ச்சுணன் கோவை வடக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.



Next Story