புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைமையில் புதிய கூட்டணி


புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைமையில் புதிய கூட்டணி
x
தினத்தந்தி 11 March 2021 11:22 AM IST (Updated: 11 March 2021 11:22 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான ‘மக்களின் முதல் கூட்டணியில்' சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மீதம் உள்ள 154 தொகுதிகள் மக்கள் நீதி மய்யம் வசம் உள்ளது. இதற்கிடையே மக்கள் நீதி மய்யத்துடன், எஸ்.டி.பி.ஐ. கட்சி, தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் அனைத்து மக்கள் அரசியல் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீடுக்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில், மக்கள் நீதி மய்யத்தின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்டார்.

இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதில் மக்கள் நீதி மய்யம் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் நீதி மய்யம் மாநில பொறுப்பாளர் சந்திரமோகன் உறுதி செய்துள்ளார். மேலும் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story