அமமுகவில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன்!


அமமுகவில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன்!
x
தினத்தந்தி 11 March 2021 8:06 AM GMT (Updated: 11 March 2021 8:09 AM GMT)

அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் அமமுகவில் இணைந்தார்.

சென்னை,

அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடம் 171 பேர் கொண்ட அதிமுக வேட்பாளர்களின் 2ம் கட்ட பட்டியலை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டனர். இதில் 3 அமைச்சர்களை தவிர மீதமுள்ள 27 அமைச்சர்களுக்கும், 45 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதில் சாத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பமனு அளித்த அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் பெயர் நேற்று அறிவிக்கப்பட்ட சாத்தூர் தொகுதி வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இல்லை . அவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அறிவிக்கப்பட்டார். இதனால் ராஜவர்மனுக்கு அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இந்நிலையில் சாத்தூரில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் அதிருப்தியில் இருந்த ராஜவர்மன் அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்தார். அக்கட்சியின் பொதுசெயளாலார் டி.டி.வி தினகரனை நேரில் சந்தித்து இன்று அமமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ராஜவர்மன் கூறியதாவது:-

உழைப்பவர்களுக்கு அதிமுகவில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. வெற்றி வாய்ப்புள்ள யாருக்கும் அதிமுகவில் சீட் வழங்கப்படவில்லை. தொகுதியில் நான் பணியாற்றியதை மாற்று கட்சியினரிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம். தொகுதி மக்களுக்கு பல நன்மைகள் செய்துள்ளேன்.

அதிமுகவை இனி ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. சசிகலா ஒருவரால்தான் அதிமுகவை காப்பாற்ற முடியும். நான் சாத்தூர் தொகுதி கேட்டு அமமுகவில் விருப்பமனு அளித்துள்ளேன், வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story