மாநில செய்திகள்

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி + "||" + Marxist Communist Party in the DMK alliance is dragging its feet in finalizing the contesting constituencies

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி ஏற்பட்டு உள்ளது.
சென்னை

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

சட்டமன்றத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. நீண்ட இழுபறிக்கு பின்னர் தொகுதிகள் உடன்பாடு நிறைவுபெற்றது.  இந்த கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன. 

இந்நிலையில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்  போட்டியிடும் 6 தொகுதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:-

1.பவானிசாகர் (தனி).

2.திருப்பூர் வடக்கு.

3.சிவகங்கை.

4.திருத்துறைப்பூண்டி.

5.வால்பாறை (தனி).

6.தளி.

ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

மதுரவாயல், கோவில்பட்டி, திண்டுக்கல், கோவை வடக்கு, திருப்பூர் தெற்கு, பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விருப்பத் தொகுதிகளாக பட்டியலிட்டுள்ளது.

மதுரவாயல் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படும் நிலையில், மார்க்சிஸ்டுக்கு ஒதுக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. மேலும், பத்மநாபபுரம் தொகுதியில் தற்போதையை எம்.எல்.ஏ.வாக திமுகவைச் சேர்ந்தவர் இருப்பதால், அந்த தொகுதியை ஒதுக்குவதிலும் திமுக தயக்கம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.

3 நாட்களாக நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாத நிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. புதிய எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் இன்று பதவியேற்பு
தமிழகத்தில் இதுவரை பதவியேற்காத 10 புதிய எம்.எல்.ஏ.க்களில் 9 பேர் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
2. தமிழகம்: புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 60 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள்
தமிழ்நாட்டில் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 60 சதப்வீதம் பேர்மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன என ஜனநாயக சீர்திருத்தக் சங்க அறிக்கை கூறி உள்ளது.
3. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் ; தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
4. திமுக, அதிமுக அடுத்து தமிழகத்தில் 3வது பெரிய கட்சி எது? கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்
தமிழக சட்டசபை தேர்தலில் எந்ததெந்த கட்சிகள் எவ்வளவு வாக்கு சதவிகிதத்தை பெற்றது என்று தேர்தல் ஆணையம் விவரங்களை வெளியிட்டுள்ளது.
5. தேர்தல்கள் வரும் போகும், நல்ல பணிகள் கண்டிப்பாகத் தொடர வேண்டும் -மு.க.ஸ்டாலினுக்கு குஷ்பு வாழ்த்து
தேர்தல்கள் வரும் போகும், நல்ல பணிகள் கண்டிப்பாகத் தொடரப்பட வேண்டும் என மு.க.ஸ்டாலினுக்கு குஷ்பு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.