திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் விவரம்


திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் விவரம்
x
தினத்தந்தி 11 March 2021 7:03 PM IST (Updated: 11 March 2021 7:03 PM IST)
t-max-icont-min-icon

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு உடன்பாடு கையெழுத்தானது.

சென்னை

சட்டமன்றத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. நீண்ட இழுபறிக்கு பின்னர் தொகுதிகள் உடன்பாடு நிறைவுபெற்றது. இதில் சில கட்சிகளுக்கு  தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு உடன்பாடு கையெழுத்தானது.

பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், ஊத்தங்கரை,ஓமலூர், உதகை, கோவை தெற்கு, காரைக்குடி,மேலூர், சிவகாசி, ஸ்ரீவைகுண்டம், குளச்சல், விளவங்கோடு,கிள்ளியூர், ஈரோடு கிழக்கு, தென்காசி, அறந்தாங்கி, விருதாச்சலம், நாங்குநேரி, கள்ளக்குறிச்சி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாடனை, உடுமலைப்பேட்டை, மயிலாடுதுறை, வேளச்சேரி  ஆகியவைகளாகும்.

Next Story