தமிழக சட்டசபை தேர்தல்: 50 பேர் கொண்ட அ.ம.மு.க.வின் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு


தமிழக சட்டசபை தேர்தல்: 50 பேர் கொண்ட அ.ம.மு.க.வின் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 12 March 2021 3:37 AM IST (Updated: 12 March 2021 3:37 AM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 50 பேர் கொண்ட 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. டி.டி.வி.தினகரன் கோவில்பட்டியில் போட்டியிடுகிறார்.

சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தலுக்கான 15 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

இதனைதொடர்ந்து 50 பேர் கொண்ட 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் டி.டி.வி.தினகரன், உள்பட பல முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

டி.டி.வி.தினகரன்

அதன்விவரம் வருமாறு:-

கோவில்பட்டி-டி.டி.வி.தினகரன், குடியாத்தம் (தனி) -ஜெயந்தி பத்மநாபன், ராமநாதபுரம்-மண்டபம் முனியசாமி, திருநெல்வேலி-பாலகிருஷ்ணன் என்ற பால் கண்ணன், திருப்போரூர்-கோதண்டபாணி, திருப்பரங்குன்றம்-டேவிட் அண்ணாதுரை, மானாமதுரை (தனி) மாரியப்பன் கென்னடி, தாம்பரம்-கரிகாலன், திருவையாறு-வேலு கார்த்திகேயன், தியாகராயநகர்-பரணீஸ்வரன், திருப்பர் தெற்கு-விசாலாட்சி, விழுப்புரம்-பாலசுந்தரம், சாத்தூர்-ராஜவர்மன், பொன்னேரி-பொன்ராஜா, பூந்தமல்லி (தனி) -ஏழுமலை,

அம்பத்தூர்-வேதாச்சலம், சேலம் தெற்கு-வெங்கடாச்சலம், எடப்பாடி-பூக்கடை சேகர், பரமத்திவேலூர்-சாமிநாதன், திருச்செங்கோடு-ஹேமலதா, அந்தியூர்-செல்வம், குன்னூர்-கலைச்செல்வன், பல்லடம்-ஜோதிமணி, கோவை வடக்கு-அப்பாத்துரை, திண்டுக்கல்-ராமுதேவர், மன்னார்குடி-காமராஜ், ஒரத்தநாடு-சேகர், காரைக்குடி-பாண்டி, ஆண்டிப்பட்டி-ஜெயக்குமார், போடிநாயக்கனூர்-முத்துசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர்- எஸ்.சங்கீதப்ரியா சந்தோஷ்குமார், சிவகாசி-சாமிகாளை, கிணத்துக்கடவு-ரோகிணி கிருஷ்ணகுமார்,

நேரடி போட்டி

மண்ணச்சநல்லூர்-தொட்டியம் ராஜசேகரன், முதுகுளத்தூர்-முருகன், மதுரவாயல்-லக்கி முருகன், மாதவரம்-தட்சிணாமூர்த்தி, பெரம்பூர்-லட்சுமி நாராயணன், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி-இல ராஜேந்திரன், அணைக்கட்டு-சத்யா என்ற சதீஷ்குமார், திருப்பத்தூர்-ஞானசேகர், பர்கூர்-கணேஷ்குமார், ஓசூர்-மாரே கவுடு, செய்யாறு-வரதராஜன், செஞ்சி-கவுதம் சாகர், ஓமலூர்-மாதேஸ்வரன், திருவாடானை-ஆனந்த், விளாத்திகுளம்-சீனிச்செல்வி, கன்னியாகுமரி-செந்தில்முருகன், நாகர்கோவில்-ரோஸ்லின் அமுதராணி.

கோவில்பட்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து டி.டி.வி.தினகரன் களம் காண்கிறார். இதனால் கடம்பூர் ராஜூ, டி.டி.வி.தினகரன் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

Next Story