மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டி


மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டி
x
தினத்தந்தி 12 March 2021 8:25 AM GMT (Updated: 12 March 2021 8:25 AM GMT)

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ளார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் தலைமையிலான மக்களின் முதல் கூட்டணியில் ஏற்கனவே சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுக்கு தலா 40 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. மக்கள் நீதி மய்யத்துக்கு 154 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இதில் 70 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் அறிவித்தார். 
இதற்கிடையே தமிழக மக்கள் ஜனநாயக கட்சிக்கு 10 தொகுதிகளும், தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு முதல் கட்டமாக செங்கல்பட்டு, காட்பாடி, வேப்பனஹள்ளி மற்றும் திருவாரூர் ஆகிய 4 தொகுதிகளும் ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட உள்ள 2-ம் கட்ட வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ளார்.

திருவிக நகர் தொகுதியில் கரு.பழனியப்பன் போட்டியிடுகிறார்.

மயிலாப்பூர் தொகுதியில் ஸ்ரீபிரியா போட்டியிடுகிறார்.

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் போட்டியிட உள்ள நிலையில் இத்தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜக-வுக்கும், திமுக கூட்டணியில் காங்கிரசுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story