த.மா.கா. போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு
அதிமுக கூட்டணியில் த.மா.கா. போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை
தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. தற்போது த.மா.கா.ஜி.கே வாசன் அந்த 6 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், 06.04.2021 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தேர்தலில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கிறேன்.
1. திரு.வி.க. நகர் (தனி) பி.எல். கல்யாணி
2. ஈரோடு (கிழக்கு) - எம். யுவராஜா
3. லால்குடி - டி.ஆர் தர்மராஜ்
4. பட்டுக்கோட்டை - என்.ஆர்.ரங்கராஜன்
5. தூத்துக்குடி -எஸ்.டி.ஆர். விஜயசீலன்
6. கிள்ளியூர் - கே.வி ஜூட் தேவ்
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story