தேர்தல் ஆணையம் விழிப்புடன் இருக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்


தேர்தல் ஆணையம் விழிப்புடன் இருக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 12 March 2021 12:11 PM GMT (Updated: 12 March 2021 12:11 PM GMT)

வேட்புமனுக்கள் ஏற்கும்போது விழிப்புடன் இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை,

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவுடன் தாக்கல் செய்யும் பிரமாண பத்திரத்தில் பெயர், சொத்துவிவரம், கடன் விவரம், கல்வி விவரம், குற்றப்பிண்ணனி உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும். 

ஆனால், கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.பி.க்களின் வேட்புமனுக்கள் முறையாக தாக்கல் செய்யப்படவில்லை எனக்கூறி திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மேலும், வேட்புமனுக்கள் முறையாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்தார்.

இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ’வேட்புமனுக்கள் ஏற்கும்போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

Next Story