மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் ஐ.ஜே.கே. போட்டியிடும் 20 தொகுதிகள் அறிவிப்பு
மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் ஐ.ஜே.கே. போட்டியிடும் 20 தொகுதிகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் தலைமையிலான மக்களின் முதல் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 இடங்கள், இந்திய ஜனநாயக கட்சிக்கு 40 இடங்கள், மக்கள் நீதி மய்யத்துக்கு 154 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இதுவரை 110 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் 40 தொகுதிகளின் பட்டியலை ச.ம.க. தலைவர் சரத்குமார் இன்று வெளியிட்டார். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும் 40 இடங்களில் 20 இடங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஐ.ஜே.கே வெளியிட்டுள்ள 20 தொகுதிகளின் பட்டியல்;-
சேப்பாக்கம், செங்கல்பட்டு, காட்பாடி, குடியாத்தம், அரூர்(தனி), செங்கம்(தனி), கலசப்பாக்கம், மயிலம், விக்கிரவாண்டி, திருக்கோயிலூர், சங்கராபுரம், வீரபாண்டி, குளித்தலை, பெரம்பலூர்(தனி), அரியலூர், விருத்தாச்சலம், புவனகிரி, நன்னிலம், திருவையாறு, பேராவூரணி ஆகிய 20 தொகுதிகளில் ஐ.ஜே.கே போட்டியிட உள்ளது. மேலும் 20 தொகுதிகளுக்கான பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story