புதுச்சேரியில் பாஜக-அதிமுக தொகுதி பங்கீட்டில் இழுபறி


புதுச்சேரியில் பாஜக-அதிமுக தொகுதி பங்கீட்டில் இழுபறி
x
தினத்தந்தி 13 March 2021 7:29 AM GMT (Updated: 13 March 2021 7:29 AM GMT)

புதுச்சேரியில் பாஜக-அதிமுக தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. கேட்ட இடங்கள் கிடைக்காததால் அதிமுகவினர் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி,

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இத்தேர்தலில், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் கொடுக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஆனால், கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக மற்றும் பாமக கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படாமல் உள்ளது.

இந்நிலையில், பாஜக-அதிமுக இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பாக நடந்த பேச்ச்சுவார்த்தையில் முடிவு தற்போதுவரை எட்டப்படாததால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. கேட்ட இடங்கள் கிடைக்காததால் அதிமுகவினர் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக-அதிமுக இடையே இழுபறி ஏற்பட்டுள்ளநிலையில் புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன், வையாபுரி மணிகண்டன், பாஸ்கரர், ஹசானா ஆகிய 4 பேர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சேலத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Next Story