அமைச்சர் ஜெயக்குமாருக்கு சவால் விடும் வகையில் தி.மு.க. வேட்பாளர் நூதன பிரசாரம்
அமைச்சர் ஜெயக்குமாருக்கு சவால் விடும் வகையில் தி.மு.க. வேட்பாளர் நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.
சென்னை ராயபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார், நிருபர்களிடம் கூறும்போது, “தி.மு.க. ஆட்சியில் கொடுக்கப்பட்ட விலையில்லா வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் இன்றும் வேலை செய்வதை நிரூபித்தால் ரூ.1 லட்சம் வழங்குவதாக” சவால் விடுத்தார்.
இந்த நிலையில் ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாரை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி, தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட விலையில்லா வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை தனது பிரசார வாகனத்தின் 4 புறங்களிலும் வைத்து ஓடவிட்டு, அதை பொதுமக்களிடம் காண்பித்து அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சுக்கு பதிலளித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். ராயபுரத்தில் இருந்து ராபின்சன் பூங்கா வரை அமைச்சர் ஜெயகுமாருக்கு சவால் விடும் வகையில் தி.மு.க. வழங்கிய விலையில்லா வண்ண தொலைக்காட்சியை வைத்து பேரணியாக சென்று அவர் பொதுமக்களிடம் நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.
Related Tags :
Next Story