மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராக உள்ளனர் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராக உள்ளனர் என திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் தேதி நெருங்கி வருவதால் பிரசாரம், தொகுதி பங்கீடு, கூட்டணி, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கட்சி வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை உள்ளிட்டவற்றை வெளியிட்டு திவீர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
தேர்தலில் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் தொகுதிக்குட்பட்ட பகுதியில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
பிரசாரத்தை சென்ற வருடம் நவம்பர் மாதமே தொடங்கிவிட்டேன். மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராக உள்ளனர். திமுக வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். பிற தொகுதிகளுக்கு சென்றும் பிரசாரம் செய்ய உள்ளேன்.
என்றார்.
Related Tags :
Next Story