காரைக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளராக ஹெச்.ராஜா போட்டி


காரைக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளராக ஹெச்.ராஜா போட்டி
x
தினத்தந்தி 14 March 2021 12:33 PM GMT (Updated: 2021-03-14T18:03:40+05:30)

காரைக்குடி தொகுதியில் பாஜக மூத்த தலைவரான ஹெச்.ராஜா போட்டியிடுகிறார்.

சென்னை,

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக-வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

டெல்லியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து அப்பட்டியலை வெளியிட்டார். 20 தொகுதிகளில் 17 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்களை அவர் வெளியிட்டார். எஞ்சிய 3 தொகுதிகளுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மூத்த தலைவரான ஹெச். ராஜா போட்டியிடுகிறார்.

இவர் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை எதிர்த்து போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   

Next Story