“எழுவர் விடுதலை, கல்விக்கடன் தள்ளுபடி” - அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு


“எழுவர் விடுதலை, கல்விக்கடன் தள்ளுபடி” - அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
x
தினத்தந்தி 14 March 2021 1:30 PM GMT (Updated: 14 March 2021 1:30 PM GMT)

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, இணை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இருவரும் வெளியிட்டனர்.

சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. 178 தொகுதிகளில் களமிறங்குகிறது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் அறிக்கையை வெளியிடும் பணி தொடங்கியது.

திமுக தேர்தல் அறிக்கை நேற்று வெளியான நிலையில் இன்று அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதனை அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, இணை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இருவரும் வெளியிட்டனர். முக்கிய அம்சமாக அம்மா வாஷிங் மெஷின் அனைவருக்கும் வீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது

தேர்தலில் போட்டியிடும் ஒவ்வோர் அரசியல் கட்சியும் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், அல்லது தங்கள் கட்சி கூட்டணியில் இருந்தால் இந்தவகையான மக்கள் பிரச்சினைகளை தீர்ப்போம், இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்க்க முன்னுரிமை அளிப்போம் என்றெல்லாம் வாக்குறுதி போன்று அளிப்பார்கள்.

தேர்தலில் கதாநாயகன் தேர்தல் அறிக்கை. டி.20 மேட்ச் போல் விறுவிறுப்பாக இருக்கும் தேர்தல் அறிக்கையில் முதல் இன்னிங்க்ஸில் நேற்று திமுக பெரிய ஸ்கோர் அடித்தது போல் பல அம்சங்களை கொண்ட அறிக்கை வெளியிட்டு அதற்கு வரவேற்பும் கிடைத்துள்ளது. இரண்டாவது இன்னிங்கஸாக அதிமுக இன்று அறிக்கை வெளியிட்டனர், அதைவிட அதிக ஸ்கோர் செய்யும் வகையில் அதில் அறிவிப்புகள் இருக்குமா என்பதை வாக்காளர்களும், அரசியல் ஆர்வலர்களும் முடிவு செய்வர். 

மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் வந்துள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:

அம்மா வாஷிங்க் மெஷின் திட்டம்

அனைவருக்கும் வீடு அம்மா இல்லம் திட்டம்

மகளிருக்கு பேருந்துச் சலுகை

தொலை நோக்கு திட்டம் 2023

ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் திட்டம்

உணவு மானியம்

அனைவருக்கும் சூரிய சக்தி சமையல் அடுப்பு

கல்விக்கடன் தள்ளுபடி

மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2 ஜி டேட்டா

யூபிஎஸ்ஸி , ஜேஇஇ நீட் பயிற்சி மையம்

வீட்டில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு

முதியோர் ஓய்வூதிய திட்டம் 2000 ஆக உயர்வு

திருமண உதவி திட்டம் உயர்வு

கொசுவலை வழங்கும் திட்டம்

மத்திய அரசுப்பணியில் மாநிலத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை

தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம்

எழுவர் விடுதலை

நீதிமன்றத்தில் தமிழ்

மேற்கண்ட அறிவிப்புகளுடன் அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Next Story