குறிஞ்சிப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம் - அதிமுக தலைமை அறிவிப்பு


குறிஞ்சிப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம் - அதிமுக தலைமை அறிவிப்பு
x
தினத்தந்தி 14 March 2021 3:36 PM GMT (Updated: 14 March 2021 3:59 PM GMT)

குறிஞ்சிப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

சென்னை,

இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருபதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 6.4.2021 அன்று நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், கடலூர் மத்திய மாவட்டம், (156) குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளருக்கு பதிலாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக திருமதி.செல்வி இராமஜெயம் அவர்கள் (கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் கடவார் கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் முன்னாள் அமைச்சர்) தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதிமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 6ஆம் தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு, அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளராக ஜான்தங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story