‘தி.மு.க. தேர்தல் அறிக்கை அமுதசுரபி’ வைகோ பேட்டி
உறுதியாக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் ‘தி.மு.க. தேர்தல் அறிக்கை அமுதசுரபி’ வைகோ பேட்டி.
ஆலந்தூர்,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நேற்று டெல்லி சென்றார். முன்னதாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் வைகோ கூறியதாவது:-
தி.மு.க. தேர்தல் அறிக்கை மக்களுக்கு வாரி வாரி வழங்கக்கூடிய அட்சய பாத்திரம்போல் அமுதசுரபி. மகத்தான அறிக்கையாக அமைந்து உள்ளது. 17-ந் தேதி ம.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது. 18-ந் தேதி மாலை 5 மணியில் இருந்து கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை தொடங்குகிறேன்.
தி.மு.க. உறுதியாக 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். 234 தொகுதிதான் இலக்கு. ஆனாலும் 200 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறும். உடல்நலம் இல்லாமல் இருந்ததால் நீண்ட நாட்களாக நாடாளுமன்றத்துக்கு செல்லாமல் இருந்தேன். 60 நாட்கள் சபைக்கு செல்லாமல் இருக்க முடியாது. நாடாளுமன்ற வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு வந்து தேர்தல் பணியாற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story