எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி வேட்புமனு தாக்கல்


எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 15 March 2021 2:17 PM IST (Updated: 15 March 2021 2:17 PM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் பழனிசாமி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

எடப்பாடி,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கட்சிகளுக்கு இடையே கூட்டணி, தொகுதி பங்கீடு இறுதிசெய்யப்பட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடத்தொடங்கியுள்ளன.மேலும், கட்சி வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிட தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்த வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில், அதிமுக சார்பில் தமிழக முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார்.   

இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். அவர் 7-வது முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்.

எடப்பாடி பழனிசாமி 1989, 1991, 1996, 2006, 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இதில் அவர் 4 முறை வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story