கோவை தெற்கு தொகுதியில் பாஜக 100 சதவீதம் வெற்றி பெறும் - பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன்
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கோவை,
கோவை தெற்கு தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளராக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். கோவை ஓசூர் சாலையில் உள்ள மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில், தெற்கு தொகுதி தேர்தல் அலுவலர் சிவசுப்பிரமணியனிடம் வானதி சீனிவாசன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதன் பின்னர் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
"இத்தொகுதியில் அதிமுக முன்னரே வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை நான் இங்கு தோல்வி அடைந்து இருந்தாலும், மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு சேர்த்து இருக்கின்றேன்.
கோவை தெற்கு தொகுதியில் நிச்சயமாக 100 சதவீதம் பாஜக வெற்றி பெறும். 'மான்செஸ்டர்' என்று அழைக்கப்பட்டதை தாண்டி சிறப்பான நகரமாக, சர்வதேச நகரமாக கோவையை மாற்றுவோம். சமையல் கேஸ் விலை மத்திய அரசால் விரைவில் குறைக்கப்படும்".
சினிமா பிரபலங்கள் அத்தனை பேரும் அரசியலில் வெற்றி பெற்றதில்லை. திரைத்துறையில் இருந்து வந்தாலும் மக்கள் பணி செய்தவர்கள் மட்டுமே அரசியலில் வெற்றி பெற்று இருக்கின்றனர். சிறுபான்மையின மக்களின் வாக்குகள் அதிமுகவுக்கு தான் கிடைக்கும். கடந்த முறை சிறுபான்மை மக்கள் வாக்களித்து இருக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story