''தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும்'' - அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டி


தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் - அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டி
x
தினத்தந்தி 15 March 2021 10:55 AM GMT (Updated: 2021-03-15T16:25:09+05:30)

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி 3-வது முறையாகப் போட்டியிடுகிறார். இதையொட்டி, நாட்றாம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமியிடம் அமைச்சர் கே.சி.வீரமணி இன்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கே.சி.வீரமணி கூறியதாவது:- 

''ஜோலார்பேட்டை தொகுதியில் 3-வது முறையாகப் போட்டியிடுகிறேன். கூட்டணிக் கட்சி சார்பில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஜோலார்பேட்டை தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்துள்ளேன். குறிப்பாகப் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருப்பத்தூர் தனி மாவட்டம் 2019-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அனைத்து வாக்குறுதிகளும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும்''

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story