வேட்பாளர்களின் செலவு கணக்குகள் கண்காணிக்கப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்


வேட்பாளர்களின் செலவு கணக்குகள் கண்காணிக்கப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
x
தினத்தந்தி 15 March 2021 12:23 PM GMT (Updated: 15 March 2021 12:23 PM GMT)

வேட்பாளர்களின் செலவு கணக்குகளை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை,

இது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. 12ஆம் தேதி முதல் இன்று மதியம் வரை  59 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் ஆண்கள்-58 பேர், ஒரு பெண் அடங்குவர்.

தமிழகத்தில் இதுவரை ரூ.109.45 கோடி மதிப்பில் பணம்,பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உரிய ஆதாரங்களை காட்டினால் பணம் பொருள் திரும்ப வழங்கப்படும். தேர்தல் விதிமீறல் குறித்து இதுவரை 1,120 புகார் வந்துள்ளன. அதில் 600-க்கும் மேற்பட்ட புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் வங்கி கணக்கு, கூகுள் பே தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. முதல் முறை வாக்காளர்களுக்கு இதுவரை 16 லட்சம் வாக்காளர் அட்டை விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story