புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்: அமமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளீயிடு


புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்: அமமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளீயிடு
x
தினத்தந்தி 15 March 2021 9:32 PM IST (Updated: 15 March 2021 9:32 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் அமமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு அடுத்த (ஏப்ரல்) மாதம் 6-ந் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி பேரவைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் கடந்த 12-ம் தேதி அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட அறிவிப்பில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலில் 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

"அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிமன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 06.04.2021 அன்று நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம் கட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக கீழ்காணும் தொகுதிகளுக்கு கீழ்காண்பவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Next Story